Alai Alaiyaaga song Lyrics in Tamil movie from”Guitar Kambi Mele Nindru”.song sung by singers “Karthik“.Alai Alaiyaaga lyrics writer by”Karky“,and Music Compossed by “Karthik”.
Alai Alaiyaaga Song Credits
Movie/Album Name | Guitar Kambi Mele Nindru (Navarasa) |
Song Name | Alai Alaiyaaga |
Music Composed | Karthik |
Lyricist | Karky |
Singers | Karthik |
Star Cast | Suriya, Prayaga Martin |
Music Label | Think Music |
Alai Alaiyaaga song Lyrics
அலை அலையாக அலை அலையாக
எனக்குள்ளே பாய்கிறாய்
ஒவ்வொரு மோதலும்
ஒவ்வொரு காதலாய்
துளித்துளியாக துளித்துளியாக
இதயத்தில் வீழ்கிறாய்
ஒவ்வொரு தூறலும்
ஒவ்வொரு காதலாய்
பாற்கடலும் பனித்துளியில்
அடங்கிடும் என்கிறாய்
அருவிகளை இருவிழியில்
அடக்கிடச் சொல்கிறாய்
கண்கள் மூடினேன்
கண்ணீர் ஆகிறாய்!
மார்பில் சாய்த்து
நெஞ்சின் தாளம் சேர்த்து
எனக்கென நீ முணு முணுத்தப் பாடல்
எனது நாளம் எல்லாம்
அது எதிரொலித்ததடீ!
வாழ்க்கை என்றால்
இசையெனப் புரிந்ததடீ!
என் முதல் வானமே
உன் முகம் தானடீ!
என் முதல் காதலே
உன் குரல் தானடீ!
முகை முகையாக முகை முகையாக
மனமெங்கும் பூக்கிறாய்
ஒவ்வொரு வாசமும்
ஒவ்வொரு காதலாய்
முதல் முதலாக முதல் முதலாக
எனதிசை கேட்கிறாய்
ஒவ்வொரு பாடலும்
ஒவ்வொரு காதலாய்
பால் அமுதும் தேன் தமிழும்
பொழிந்தவள் நீயடீ
உனக்கென நான் எழுதியதை
முழுவதும் கேளடீ
எந்தன் பாடலும் உன்
பேத்திதானடீ!
Watch Alai Alaiyaaga Video song