Puthukottai Bhuvaneswari Song Lyrics in Tamil. Movie from from Raja Kali Amman(2000). The Movie Star Cast is Ramya Krishnan, Kousalya, Karan, Vadivelu.. Lyrics are written by Kalidasan. Music is given by SA Rajkumar.
- பாடல்: புதுக்கோட்டை புவனேஸ்வரி
- படம்: ராஜகாளி அம்மன்
- வருடம்: 2000
- இசை: SA ராஜ்குமார்
- வரிகள்: காளிதாசன்
- பாடகர்: KS சித்ரா
Puthukottai Bhuvaneswari Song Lyrics in Tamil
புதுக்கோட்டை புவனேஸ்வரி
புவனேஸ்வரம் ஜகதீஷ்வரி
மண்ணடியின் மல்லீஸ்வரி
நங்கநல்லூர் ராஜேஸ்வரி
பாகேஸ்வரி யோகேஸ்வரி
லோகேஸ்வரி
மேல் மலையெனும்
அங்காள பரமேஸ்வரி
உறையூரு வெட்க்காளி
உஜ்சையனி மாகாளி
சிறுவாச்சூர் மதுரகாளி
திருவற்கரை பத்ரகாளி
பத்ரகாளி ருத்ரகாளி நவகாளியே
எட்டுப்பட்டி ராஜகாளி
அம்மா தாயே
நாச்சியம்மா பேச்சியம்மா
நாடியம்மா காரியம்மா
ஆலையம்மா சோலையம்மா
உண்ணாமுலையம்மா
என் மாங்கல்யம் நிலைத்திருக்க
அருள்வாய் நீயே
மைசூரு சாமுண்டியே
வருவாய் நீயே
மகமாயி மாரியம்மா
திரிசூலி நீலியம்மா
முப்பாத்தம்மா பாளையத்தம்மா
முண்டகக்கன்னி திரௌபதியே
அங்காளம்மா ஆரணி படைவீட்டம்மா
அர்த்தநாரி தாயே
உன் அருள் காட்டம்மா
ஓம் சக்தி ஓம் சக்தி தாயே
உலகாளும் ஒரு அன்னை நீயே
குழு: ஓம் சக்தி ஓம் சக்தி தாயே
உலகாளும் ஒரு அன்னை நீயே
எல்லோர்க்கும்
அருள் தரும் உந்தன் வரம்
உன் பிள்ளைக்கு
தர வேண்டும் தாலி வரம்
பிள்ளையின் துன்பம்
அன்னையச் சேரும்
உன் விழிப் பார்த்தால்
என் துயர் தீரும்
நீ வைத்த குங்குமம்
அழிந்திடலாமோ
ஓம் சக்தி ஓம் சக்தி தாயே
உலகாளும் ஒரு அன்னை நீயே
திருக்கடவூரின் அபிராமி
சிதம்பரத்தில் நீ சிவகாமி
திருப்பத்தூரின் பூமாரி
திருவேற்காட்டில் கருமாரி
குழு: தாயே
மண்டைக்காட்டு பகவதியே
மயிலாப்பூரின் கற்பகமே
கொல்லூர் வாழும் மூகாம்பிகா
தக்ஷினேஸ்வரம் பவதாரிணி
ஜகதாம்பா வடிவாம்பா
கனகாம்பா லலிதாம்பா
வாலாம்பா ஞானாம்பா
நாகாம்பா ஸ்வர்ணாம்பா
சென்னியம்மா பொன்னியம்மா
கங்கையம்மா செஞ்சியம்மா
கோணியம்மா குலுங்கையம்மா
கன்னியம்மா துளசியம்மா
ஸ்ரீசைலம் ப்ரம்மராம்பா
பெரிய நாயகி
ஸ்ரீரங்கபட்டணத்து ரங்கநாயகி
தாலி தந்த மங்களாம்பா
தையல் நாயகி
மருவத்தூர் அம்மாவே வந்து நில்லடி
ஓம் சக்தி ஓம் சக்தி தாயே
உலகாளும் ஓரு அன்னை நீயே
நெல்லை நகர் காந்திமதி
எல்லையம்மா இசக்கியம்மா
மீனாட்சி காமாட்சி
தேனாட்சி திருப்பாட்சி
விருப்பாட்சி விசாலாட்சி தாயே அம்மா
காரைக்குடி நகர் வாழும்
உக்குடையம்மா
பைரவியே வைஷ்ணவியே
அருக்காணி அழகம்மா
செல்லாயி சிலம்பாயி
கண்ணாத்தா சாரதாம்பா
பன்னாரி அம்மாவே பால சௌந்தரி
தேனாண்டாளே
எங்கள் குல தெய்வமே
துர்க்கையம்மா குமரியம்மா
வேக்குளியம்மா கௌரியம்மா
கோல விழியம்மா முத்தாளம்மா
கஸ்தூரி வராஹியம்மா
நீலாயதாக்ஷி முத்துமாலையம்மா
பராசக்தி கொல்லிமலை
பாவையம்மா
அபயாம்பிகை நீலாம்பிகை
அலமேலம்மா வழிகோலம்மா
நாராயணி தாக்ஷாயினி
கன்னிகா பரமேஸ்வரி
கனக துர்க்கையே
பவானி ஆவுடையம்மா
என் பூவும் பொட்டும் நிலைத்திருக்க
கண் பாரம்மா
அம்மா… அம்மா…
அம்மா… அம்மா…
Puthukottai Bhuvaneswari Video Song