Azhagendra Sollukku Song Lyrics | அழகென்ற சொல்லுக்கு முருகா

Here’s the devotional song of Lord Muruga “Azhagendra Sollukku Muruga”Sung and composed by T.M. Soundararajan with lyrics by Kovai Koothan.


Azhagendra Sollukku Muruga Lyrical Video Song

 


Azhagendra Sollukku Muruga Song Credits


Song Name
Waat Laga Denge

Music Composed
T.M. Soundararajan

Lyricist
Kovai Koothan

Singers
T.M. Soundararajan

Language
Tamil

Music Label
Saregama Tamil

Azhagendra Sollukku Muruga Lyrics in Tamil


முருகா முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி
உலகிலே பொருளேது முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி
உலகிலே பொருளேது முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா!
சுடராக வந்த வேல் முருகா!
கொடும் சூரரை போரிலே
வென்ற வேல் முருகா!
சுடராக வந்த வேல் முருகா!
கொடும் சூரரை போரிலே
வென்ற வேல் முருகா
கனிக்காக மனம் நொந்த முருகா
கனிக்காக மனம் நொந்த முருகா
முக்கனியான தமிழ் தந்த
செல்வமே முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா!
ஆண்டியாய் நின்ற வேல் முருகா!
உன்னை அண்டினோர் வாழ்விலே
இன்பமே முருகா
ஆண்டியாய் நின்ற வேல் முருகா
உன்னை அண்டினோர் வாழ்விலே
இன்பமே முருகா
பழம் நீ அப்பனே முருகா!
பழம் நீ அப்பனே முருகா!
ஞானப்பழம் நீ அல்லாது
பழமேது முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா!
உந்தன் அருளன்றி
உலகிலே பொருளேது முருகா!
அழகென்ற சொல்லுக்கு முருகா!
குன்றாறும் குடிகொண்ட முருகா
பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ
அல்லவோ முருகா
குன்றாறும் குடிகொண்ட முருகா
பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ
அல்லவோ முருகா
சக்தி உமை பாலனே முருகா!
சக்தி உமை பாலனே முருகா!
மனித சக்திக்கு எட்டாத
தத்துவமே முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா!
ப்ரணவப்பொருள்
கண்ட திரு முருகா!
பரம்பொருளுக்கு
குருவான தேசிகா முருகா!
ப்ரணவப்பொருள்
கண்ட திரு முருகா!
பரம்பொருளுக்கு
குருவான தேசிகா முருகா!
அரகரா சண்முகா முருகா!
அரகரா சண்முகா முருகா!
என்று பாடுவோர் என்னத்தில்
ஆடுவாய் முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா!
அன்பிற்கு எல்லையோ முருகா!!
உந்தன் அருளுக்கு
எல்லைதான் இல்லையே முருகா!!
அன்பிற்கு எல்லையோ முருகா!!
உந்தன் அருளுக்கு
எல்லைதான் இல்லையே முருகா!!
கண்கண்ட தெய்வமே முருகா!
கண்கண்ட தெய்வமே முருகா!
எந்தன் கலியுக வரதனே
அருள் தாரும் முருகா!
அழகென்ற சொல்லுக்கு முருகா!
உந்தன் அருளன்றி
உலகிலே பொருளேது முருகா!
அழகென்ற சொல்லுக்கு முருகா!
முருகா!!! முருகா!!!! முருகா!!!!!முருகா!!!!!
t.m.soundararajan azhagendra sollukku lyrics
Song Credits:-_
  • Singer: T.M. Soundararajan
  • Music: T.M. Soundararajan
  • Lyrics: Kovai Koothan

Leave a Comment